4 Aug 2017

திருத்தம் என்பதன் பின்னுள்ள தத்துவங்கள்

திருத்தம் என்பதன் பின்னுள்ள தத்துவங்கள்
            ஒரு செயலின் முடிவில் மனம் கனமானால் அந்தச் செயலை மறுபடியும் செய்ய ஆர்வம் பிறக்காது.
            மனம் லேசாக வேண்டும். லேசான பிறகு வெளிவர வேண்டும்.
            அலட்டல் என்பது தேவையில்லாத மனஉளைச்சல். உண்மையைப் புரிந்து கொள்ள நாளாகும். ஒரு மருந்தை உட்கொள்ளும் போது தேவையில்லாமல் ஏற்படும் பின்விளைவு போன்றது அது.
            ஒன்று நடக்கும் போது எப்படி நடந்து கொள்கிறோம்? நடக்காத போது எப்படி நடந்து கொள்கிறோம்?
            எதிர்பார்க்கும் ஒன்று நடக்காத போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியம். ஆத்திரப்படாமல் அந்தச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறியேற்றிக் கொள்ளக் கூடாது. அளவுக்கதிமான எதிர்பார்ப்பும், ஆத்திரமும் சூழலைப் புரிந்து கொள்வதில் முட்டுக்கட்டை போடும்.
            சொல்வதைக் கேட்கவில்லை என்பதற்காக கோபத்தை வளர்க்கக் கூடாது. நீ உன் கருத்தைக் கூறினாய். அவர் அவரது கருத்தில் செயல்படுகிறார். விசயம் அவ்வளவுதான்.
            உலகில் உம் கருத்து மட்டுமில்லை. பல்வேறு கருத்துகள் உண்டு. அவரவர்க்கு விருப்பமான கருத்தில் அவரவர் பயணிப்பர். இதில் சரியென்றும், தவறென்றும் இரண்டு விசயங்கள் இருக்கின்றன.
            தவறு என்று தொன்றுகின்ற ஒரு கருத்தை அதன் எதிர்கருத்து மூலம் உணர்த்த முற்படலாம். அது உணர்த்தப்படுவதும், உணர்த்தப்படாமல் போவதும் கேட்பவரின் தார்மீக அறத்தின் மேல் கொண்டுள்ள மனநிலையைப் பொருத்தது என்பது முக்கியமான எச்சரிக்கைக் குறிப்பு.
            திருத்துவது என்பது யாரைத் திருத்த நினைக்கிறோமோ, அவரின் திருந்த விரும்பகின்ற மனநிலையையும் பொருத்தது. திருத்த நினைப்பவர்கள் முதலில் அவர்கள் பொறுமையாக இருப்பது அவசியம். பொறுமையில் புலப்படும் உண்மைகள் நிறைய.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...