படிப்பது எப்படி? (மதிப்பெண்களைக் குவிப்பதற்கான
மார்க்கம்)
படிப்பு (பாடப்படிப்பு மட்டும்) மன இறுக்கத்தைத்
தருகிறது. அதை மட்டுமே தருகிறது. ஆகவே இந்த தலைமுறைக்கு எஸ்.கே. விடுக்கும் வேண்டுகோள்
என்னவென்றால், சராசரியாகப் படியுங்கள், சரமாரியாகப் படிக்காதீர்கள் என்பதுதான். மதிப்பெண்களிளும்
சராசரியே போதுமானது.
மனப்பாடம் செய்வதும் சராசரியாகச் செய்தால்
போதுமானது. மனப்பாடம் ஆகும் விசயங்களை வைத்துக் கொண்டு மட்டும் தேர்வை ஒப்பேற்றத்
தெரிய வேண்டும். மனப்பாடம் ஆகாத விசயங்களுக்காகக் கலங்கக் கூடாது.
புரிதலிலும் மேற்கூறிய அஃதே வழிமுறை. புரிந்த
வரை போதும். புரியாதவற்றை புரிந்ததை வைத்து ஒப்பேற்ற வேண்டும்.
அஃது வாழ்க்கைக்கும் பொருந்தும். முடிந்தவற்றை
செய்யுங்கள். முடியாதவற்றை விட்டு விடுங்கள். அல்லது முடிகிறவற்றை வைத்து ஒப்பேற்றுங்கள்.
முடியாத விசயங்களை நினைத்துக் கொண்டு கவலைப்படுவதற்கு மனிதன் பிறப்பெடுக்கவில்லை.
நினைத்ததை முடித்தவர்களாகச் சொல்லப்படுகின்ற
எஸ்.கே.யிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும், முடிகின்ற காரியங்கள் கூட முடியாமல் போன
ஆயிரம் கதைகள். அதை எஸ்.கே. வெளியே சொல்ல மாட்டான்.
*****
No comments:
Post a Comment