அறிவுரை அல்வா & உபதேச ஜிலேபி
வாழ்க்கையில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய
முக்கிய விசயம், உணர்ச்சிவசப்பட்டு எந்த வித வாக்குறுதிகளையும் வழங்கக் கூடாது என்பதுதான்.
உணர்ச்சிவசப்பட்டு வழங்கும் வாக்குறுதிகள்
அல்வா போன்றவை. வழங்கும் போது இனிப்பாக இருக்கும். நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை
வரும் போது வேப்பெண்ணெய் குடிப்பது போல இருக்கும்.
பொதுவாக உணர்ச்சிவசப்படுவது என்பது தேவையற்றது.
அதில் உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதி வழங்குவது சர்வ நிச்சயமாய், சத்திய பிரமாணமாய்
தேவையற்றது.
அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில்
எதற்குத் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட வேண்டும்? முட்டாள்கள் இந்த மோசமான காரியத்தை
அடிக்கடி செய்கிறார்கள். அறிவாளிகள் எப்போதாவது செய்கிறார்கள். நீ முட்டாளாகவும் இராதே.
அறிவாளியாகவும் இராதே. எதார்த்தமாக இரு. அது போன்ற முட்டாள்தனங்களை ஒருபோதும் செய்ய மாட்டாய்.
*****
No comments:
Post a Comment