22 Aug 2017

செயலின்மையை விலக்கு மனித குலமே!

செயலின்மையை விலக்கு மனித குலமே!
            திட்டமிடுகிறோம். திட்டமிட்டதைச் செயல்படுத்துவதற்கான மனநிலை அமைந்தால்தான் அதைச் செயல்படுத்த முடியும் என்பது தவறு.
            இது எதனால் நிகழ்கிறது?
            திட்டமிட்டதைச் செயலுக்குக் கொண்டு வராமல் ஆர்வமின்றி மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருப்பதால் நேரும் சோம்பேறித்தனத்தால் நிகழ்கிறது. இவ்விதம் யோசித்துக் கொண்டிருந்தால் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். செயலில் இறங்குவதுதான் இதற்கு மருந்து. வேறு மருந்தில்லை.
            ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்ய முடியும். வருத்திக் கொண்டு செய்ய வேண்டியதில்லை.
            உங்களை மனரீதியாகச் சாய்ப்பதற்குப் பலபேர் தயாராக இருக்கும் போது, அதை ஏன் உங்களுக்கு நீங்களே செய்து கொள்கிறீர்கள்? எதிர்மறை மனப்பான்மைகளால் உங்களை நீங்களே முடக்கிக் கொள்ளாதீர்கள். அது உங்களிடமிருந்து வந்ததாக இருந்தால் உங்களுக்குள் நீங்களே ஆழ்ந்து பார்த்து புரிந்து கொள்ளுங்கள். தானாக விலகி விடும். வெளியிலிருந்து வந்ததாக இருந்தால் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். திடமில்லாத மனம் மற்றவர்களின் கருத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.
            யாரும் யாருக்காகக் கொடுக்கும் சோப்பு டப்பா பரிசுகளுக்காக உழைக்க வேண்டியதில்லை. பாராட்டுக்காக ஏங்கி உழைப்பதும் ஒரு வகை சுயசித்திரவதைதான்.
            ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த ஆர்வத்துக்காகவும், சுய திருப்திக்காகவும் உழைக்கலாம். அதில் நீங்கள் பலன் பெறுவது போல மனித குலமும் பலன் பெறுகிறது.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...