16 Aug 2017

கோபத்தை 'வெச்சு செய்யுங்க' பாஸ்!

கோபத்தை 'வெச்சு செய்யுங்க' பாஸ்!
            எஸ்.கே.யின் படைப்புகள் எதிலும் பிரசுரம் ஆகாதவை. கன்னித் தன்மை உடையவை. அவன் எழுதி, எழுதி, அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அனுப்பி மாய்ந்தவன். அவர்கள் போடா விட்டாலும் அவன் விடுபவனில்லை. தீவிர மனச்சோர்வுக்கு ஆட்பட்ட போதும் அதையும் படைப்பாக்கி அவன் அனுப்பியிருக்கிறான்.
            இவைகள் எல்லாவற்றையும் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்தால் கோபம் அணுகுண்டாகி விடும். அதன் திரியை அவன் எழுதி எழுதியே பிடுங்கி விடுகிறான். ஒவ்வொரு நிகழ்வையும் அவன் பகுத்துப் பகுத்துப் பார்த்து அலசிப் போடுகிறான். நிறைய கோபப்படுபவர்கள் நிறைய எழுத வேண்டும் என்பது அவன் உலகுக்கு விடுக்கும் ஒரு செய்தியாகக் கொள்ளத்தக்கது.
            கோபம் பல நல்ல பண்புகளை அழித்து விடும் என்பது அவன் அறியாதது அல்ல. அந்தக் கோபத்தையே எழுதுவதற்குரிய ஒரு நல்ல பண்பாக மாற்றிக் கொண்டதுதான் அவனை நோக்கி உங்களை வாசிக்க வைக்கிறது. எந்தத் தீமையிலும் இருக்கும் நன்மை இது.
            உங்கள் கோபத்திற்காக நீங்கள் சந்தோசப்படுங்கள். அதை அநேகமாக எஸ்.கே. செய்தது போல இன்னொரு வழியில் திசைமாற்றி விட்டு விடலாம். முடியாது என்று நினைக்கும் காரியங்களை கோபப்படும் போது செய்து பார்க்கலாம். நிச்சயம் முடித்து விடுவீர்கள். இப்படிக் கோபப்பட்டு கோபப்பட்டு நிறைய காரியங்களைச் செய்யலாம். நல்ல விசயந்தானே என்கிறீர்களா? கொஞ்சம் அவ்வபோது பி.பி.யையும் செக் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் விசயம்!

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...