17 Aug 2017

எழுத ஆரம்பிப்பது எப்படி?

எழுத ஆரம்பிப்பது எப்படி?
            நகைச்சுவைத் துணுக்குகள், நொடிக்கதைகள் எழுதுவது என்று ஆரம்பித்து பரபரவென்று இருந்தான் எஸ்.கே. ஒரு நாளில் நூற்றுக் கணக்கில் எழுதி தள்ளியிருக்கிறான்.
            இந்த உலகிற்கு உன்னுடைய கருத்து என்ன? என்று அவன் மனசாட்சி கேள்விக் கேட்க ஆரம்பித்த போது கவிதை, சிறுகதை என்று மாறினான். அதில் அவன் மனம் லயிக்கவில்லை. எழுத்து ஒரு மாதிரி தத்துவார்த்தமாக போனது. அவன் மனப்போக்கிற்கு எழுத ஆரம்பித்தான். அந்த வழியில் அவன் எழுதிய முக்கிய மூன்று சங்கதிகள்
            1) எழுத்தால் வழிகாட்டும் ஒரு ராஜனைப் போல் எழுத வேண்டும். அனைத்து எழுத்திற்கும் தலைமையேற்கும் எழுத்து இதுவே என்ற இறுமாப்போடு எழுத வேண்டும்.
            2) புனைவுக்குள் ஒளிந்து கொள்வது ஒரு நல்ல வழி.
            3) யாரைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ, அந்த எண்ணத்தாலே பழிவாங்கப்படுவீர்கள். அமைதியான எண்ணங்கள் சரிவரவில்லை என்றாலும் உங்களைத் தவறாக்கி விடாது.
            எதாவது புரிகிறதா என்று பாருங்கள். புரிந்தால் உங்கள் நல்லதிர்ஷ்டம்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...