இடைவெளிக்கு அப்பால்...
தேவையில்லாமல் விளக்கம் கூறும் பலரைப்
பார்த்திருக்கிறான் எஸ்.கே. அவனே கூட தேவையில்லாமல் விளக்கம் கூறும் ஒரு மண்டூக வகையறாவைச்
சேர்ந்தவன்தான். அவன் மாட்டிக் கொள்வதற்கும், சிக்கிக் கொள்வதற்கும் அவனது தேவையில்லாத
விளக்கங்களே காரணமாக இருந்திருக்கின்றன. இதனால் எதிரிகள் யாரும் அதற்குக் காரணமில்லை
என்பதை விளங்கிக் கொள்ளவும்.
எஸ்.கே. சொல்வதை ஏற்றுக் கொள்பவர்களும்
இருக்கிறார்கள். அதில் குற்றம் கண்டுபிடித்து மாட்டி விடுபவர்களும் இருக்கிறார்கள்.
அவனது விளக்கத்தையே அவனுக்கு எதிராக மாற்றி விடுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் அவன்
பெரும்பாலும் விளக்கம் சொல்வதைக் குறைத்து விட்டான். சொன்னாலும் தேவைக்கதிமாக சொல்வதில்லை.
எஸ்.கே.யின் எழுத்துகளில் ஏற்படும் இடைவெளிகள்
மேற்காண் காரணத்தால் ஏற்படுபவையே. மற்றபடி அவன் திட்டமிட்டு எந்த இடைவெளியையும் உருவாக்குவதில்லை.
எதையெல்லாம் மறைக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ, அதில் ஒரு இடைவெளி அவனை அறியாமலே
உருவாகி விடுகிறது. அந்த இடைவெளியில் நின்று பார்த்தால் உங்களுக்கு உலகத்தின் அவ்வளவு
உண்மைகள் தெரியும். அந்த இடைவெளி அவன் எழுத்தில் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிப்பதுதான்
சிரமம். கண்டுபிடித்து விட்டால் ... நீங்கள் எஸ்.கே.வின் பரம விசிறி என்பதை யார் சொல்லியும்
உறுதிபடுத்த வேண்டிய அவசியமில்லை.
*****
No comments:
Post a Comment