எழுத்து தியானம் என்பது...
எழுதுவது என்பது பிரசுரத்தைத் தாண்டி மனதுக்கு
ஒரு ரலீப்பைக் கொடுக்கக் கூடியது. மனதை அழகாக மடைமாற்றம் செய்வதில் எழுதும் செயல்
ஒரு மகத்தான் செயல். ஆகவே எழுத்து என்பதை வெறும் பண ஆதாயம் செயலாக மட்டும் பார்க்கக்
கூடாது. அதை தன்னிலிருந்து தான் விடுபட்டுக் கொள்ளும் ஒரு அற்புதமாகவும் பார்க்க வேண்டும்.
என்னுடைய எழுத்தின் அடிப்படையாக நான் என்னைப்
பற்றி எழுதிய எழுத்துகளையே குறிப்பிட வேண்டும். அதில் தரமுள்ளது, தரமற்றது என்று எதையும்
என்னால் குறிப்பிட இயலாது. ஆனால் எழுதிக் கொண்டே இருக்கிறேன். அது என் எழுத்துக்கு
அடித்தளம் அமைத்தது. ஆக, எழுத்து என்பதை வெறும் பயனுக்காக மட்டும் செய்யாமல், தன்னை
அறியும் ஒரு வெளிப்பாட்டுக்காகவும் செய்ய வேண்டும்.
வாழ்வின் ஒரு பிரச்சனையைச், சிக்கலை, முடிச்சை
வெறும் பிரச்சனையாக மட்டும், சிக்கலாக மட்டும், முடிச்சாக மட்டும் பார்க்க முடியாது.
அதில் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன. பிரச்சனையின் ஆரம்பத்தில் இருக்கும்
மனநிலையும், போகப் போக மாறிக் கொண்டிருக்கும் மனநிலையும் கவனிக்கத் தக்கது.
ஆரம்பத்தில் இருக்கும் தலைக்கணமும், ஆணவமும்
கால் வீசம் குறையவே செய்யும்.
கற்பனையில் நினைப்பது போல வாழ்க்கை கிடையாது.
எதார்த்தம் வேறு என்பதை எழுத்து புரிய வைக்கும். அதற்கு உண்மையாக எழுத வேண்டும். இல்லையென்றால்
காலம் முழுவதும் கற்பனையாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கானல் நீரில் பிடிக்கும்
மீன்கள் கருவாட்டுக்குக் கூட ஆகாது.
*****
No comments:
Post a Comment