மூன்று கருத்துகளில் வாழ்க்கை மாற இருக்கிறது!
1) யாரும் யாருக்கும் நம்பிக்கை ஊட்ட முடியாது.
அது அவரவர் தன்னம்பிக்கையில் இருக்கிறது மற்றும் அவரவர் மனதில் இருக்கிறது.
2) விலக்கப்படுவதை விட நன்மை எதுவுமில்லை.
நீங்கள் உங்கள் சுதந்திரத்திற்கு விடப்படுகிறீர்கள்.
நீங்கள் விலக்கப்படாவிட்டால் அது குறித்து
சிந்தித்து இருக்க மாட்டீர்கள். விலக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு அது
ஒரு வாய்ப்பு. முற்றிலும் புதிய கருப்பொருளில் நீங்கள் இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.
3) முயற்சி என்பது ஓர் அளவுக்குத்தான்.
சில விசயங்கள் அப்படித்தான் நடந்து தீரும். அதை எதுவும் செய்ய முடியாது. ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால் அப்படியே நின்று விடாதீர்கள். அந்த புள்ளியிலிருந்து முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்திற்கு
நகர்வதற்கான வாய்ப்பை உற்று கவனித்தபடி இருங்கள். நிச்சயம் ஒன்று அப்படி அங்கு இருக்கும்.
மற்றவர்கள் மற்றும் உங்களின் மனதைப் பற்றியும்,
உங்களுக்கு நேரும் புறக்கணிப்புப் பற்றியும்,
முயற்சிக்குப் பின் கட்டமைத்துக் கொள்ள
வேண்டிய மனநிலைப் பற்றியும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கருத்துகள் இதுவரை நீங்கள்
காணாத ஒரு புதிய பார்வைக்கு உங்களை இட்டுச் செல்லும்.
உங்கள் பார்வை புதுமை அடையாமல் உங்கள்
பழைய வாழ்க்கையை மாற்ற முடியாது. வாழ்க்கை ஒரே வாழ்க்கைதான். மனதின் பார்வைகளால் நேர்குத்தாக
மாறிப் போகும் வாழ்க்கை உண்டு.
இப்போது மீண்டும் ஒருமுறை மேலே சொல்லப்பட்ட
மூன்று கருத்துகளைப் பார்த்துக் கொண்டே, உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்.
*****
No comments:
Post a Comment