27 Aug 2017

மாற்று

ஏன்?
            "பொண்ணு பிடிக்கலம்மா!"
            "ஏண்டா?"
            "அவங்க வீட்டுல வை-பை கூட இல்ல!"
*****
மாற்று
            "ப்ளாஸ்டிக் அரிசி பயம் வேண்டாம். அனைத்து பிராண்ட் ஆட்டா மாவுகளும் கிடைக்கும்!" கடைக்கு முன் பெரிதாக பேப்பரில் எழுதி ஒட்டியிருந்தார் மளிகைக் கடை அண்ணாச்சி.
*****
கேள்வி
            "அப்பா இருக்குற வரைக்கும் அப்பா சொல்றதைக் கேக்கணும்டா செல்லம்!" மென்மையாகச் சொன்ன ரவியிடம், சற்று கடுமையாகவே கேட்டாள் யாழினி, "அதுக்குதான் தாத்தாவைக் கொண்டு போய் முதியோர் இல்லத்துல விட்டீங்களா?"

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...