8 Aug 2017

நம்பிக்கைத் தரும் நம்பிக்கையற்றவன்

நம்பிக்கைத் தரும் நம்பிக்கையற்றவன்
            புதிதாக வரும் ஒருவருக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான் எஸ்.கே. ஏன்? அப்படிச் செய்ய வேண்டும் என்ற மாயவலையில் தன்னை அறியாமல் அவன் சிக்கியிருக்கிறான்.
            ஒருவேளை புதிதாக வரும் ஒருவர் பிற்காலத்தில் பெரிய ஆளாக வந்து, அவரைப் பாராட்டாமல் விட்டு, அவர் அதைப் பிற்காலத்தில் குறிப்பிட்டு விடுவாரோ என்று அஞ்சுகிறான் எஸ்.கே.
            இப்படி ஓர் அச்சத்தில் தவிக்கிறான் எஸ்.கே. அவன் தைரியத்தைக் குழைப்பது இப்படிப்பட்ட எண்ணங்கள். இதனால் பலருக்கு நம்பிக்கைக் கொடுக்கும் எஸ்.கே. தான் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்.
            எஸ்.கே. பலரிடம் நிறைய பேசுவது இல்லை. பேசினால் நல்லது. பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் அவர்கள் பேசுவதற்கு லாயக்கானவர்கள் அல்ல என்பது அவன் அபிப்ராயம். அவன் பேசுவதை அவர்கள் ஒரு மாதிரியாக உணர்ந்து கொள்வார்கள். ஒரு மாதிரியாக அர்த்தம் செய்து கொள்வார்கள். வஞ்சகர்கள். எஸ்.கே.வைக் கட்டம் கட்டி காலி செய்திருக்கிறார்கள்.
            எஸ்.கே. புதிதாக வருபவர்களிடம் மட்டும் நம்பிக்கை கொடுக்க பேசுகிறான். மற்றவர்களிடம் பேசுவதில்லை.

*****

No comments:

Post a Comment