மெளனம் மிகப்பெரிய பலம்
மெளனமே எங்கள்
மிகப் பெரிய
பலம்
நாங்கள் ஊமைகள்
இல்லைதான்
ஆனால்
மெளனம் மிகப்பெரிய
பலம்!
எங்கள் ஆடைகளைக்
களைந்து
சோதனையிட்டாலும்
மெளனம் மிகப்
பெரிய பலம்!
ஆதிமனிதன்
ஆடைகள்
அணிந்திருந்தானா
என்ன?
பேசும் மொழி
அறிந்திருந்தானா
அந்த மெளனிகன்?
விசாரணைகள்
உடைக்காத
சில பூட்டுகளின்
கள்ளச்சாவி
இந்த மெளனம்
என்று புரியாதவர்கள்
சத்தமிடட்டும்.
பாடங்கள் நடக்கும்
நேரத்தில்
பின் டிராப்
சைலன்ஸ்
அவசியம் என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்!
*****
No comments:
Post a Comment