5 Aug 2017

குறுக்கீட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

குறுக்கீட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் சொல்வதற்கு எதுவுமில்லை. அவன் தன் மனதில் தோன்றும் கருத்துகளின் அடிப்படையில் சூழ்நிலைகளை மாற்றிக் கொண்டு இருக்கிறான். இதற்கு அவன் முதலில் தன்னுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை நான் எந்த அளவுக்கு எடுத்துப் புரிய வைக்க முடியும் என்று தெரியவில்லை.
            தன்னுடைய பயத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் அவன் தன் செயல்களைச் செய்கிறான். அவனின் பயத்தை நாம் எடுத்துச் சொல்லலாம். அவனுடைய பயத்தை அவன்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
            தனக்குத் தோன்றுவதைச் செய்தால்தான் திருப்தி என்ற மனநிலையில் இருக்கும் எஸ்.கே.விடம் எதுவும் செய்வதற்கில்லை.
            எஸ்.கே. போன்றவர்களை அவர் போக்கில் விட்டு விட வேண்டும். உங்கள் போக்கில் குறுக்கிட மாட்டான். எஸ்.கே. உங்கள் போக்கில் குறுக்கிடுகிறான் என்றால் நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் அவனுடைய போக்கில் குறுக்கிட்டு இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...