அழிவு
அந்த ஒரு நல்லவன்
உறுத்தலாக
இருக்கலாம்
இடைஞ்சலாக
இருக்கலாம்
அதற்காக
அவனை அழித்து
விடாதீர்கள்.
பிறகு நம்மை
நாமே
அழித்துக்
கொள்ள நேரிடும்.
*****
பொறுப்பு
அப்பன் சொத்தை
எப்படிக் காப்பாற்றப்
போகிறான்
என்று
சொல்லும்
படிக்கு
பொறம்போக்காய்
திரிந்த
சபரிநாதன்தான்
பொறுப்பு
வந்தவன் போல்
அமைச்சராகி
ஆயிரம் கோடி சேர்த்தான்.
*****
No comments:
Post a Comment