உலகம் உங்களை எப்படி கட்டுப்படுத்தி
வைத்திருக்கிறது என்றால்...
எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்க
வேண்டும் என்று நினைக்க வேண்டாம். செய்வது மனநிறைவுக்கு எற்றாற் போல் இல்லை என்று
கருதவும் வேண்டாம்.
எப்போதும் மூளை ஒரே மாதிரியாக இயங்காது.
மாறுதல் தேவைப்படும். மாறி மாறித்தான் இயங்கும். கொஞ்சும் பொறுத்திருங்கள். நிலைமை
மாறும்.
செயல்பட வேண்டிய நேரம் போல் செயல்படாத
நேரமும் உண்டு. வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது பிரேக் போடுவதைப் போன்றது
அது.
வலிந்து கட்டிக் கொண்டு செய்வதற்கு விரோதமாக
இருங்கள். அதனால் பயனில்லை. மனதின் குரலைக் கேட்காமல் விடுவதில் எந்தப் பயனுமில்லை.
இந்த உலகம் எதிர்ப்பார்ப்பது உங்களிடம்
வெளிப்படும் உண்மைகளைத்தான். கவர்ச்சிகரமான வெற்று வார்த்தைகளை அல்ல. உங்களுக்கு நீங்கள்
உண்மையாய், அணுக்கமாய் இருங்கள்.
உங்களுக்குத் தோன்றுவது படி செயல்படுங்கள்.
பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்து விடாதீர்கள். அப்படி உண்மைத் தன்மையற்ற
எதையும் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் உங்களுக்கில்லை.
மனதில் தோன்றும் கேள்விகளைத் தயங்காமல்
இந்த உலகை நோக்கிக் கேளுங்கள். இந்த உலகம் அந்த இடத்தில்தான் உங்களைக் கட்டுபடுத்தி
வைத்து இருக்கிறது.
அந்தக் கட்டுப்பாட்டை நீங்கள் விடுவித்துக்
கொண்டால் நீங்கள் செயல்படுவதில் எந்த இடத்திலும் குழம்ப மாட்டீர்கள். தயங்கி நிற்கவும்
மாட்டீர்கள்.
*****
No comments:
Post a Comment