எழுத்து சந்நியாசியாசம் வாங்கிக் கொள்வது
நல்லது
எஸ்.கே.வுக்கு அந்த மனநிலை சற்று வித்தியாசமாகத்தான்
இருந்தது.
மனம் மிகுந்த பதற்றமாக இருந்தது.
அதே நேரத்தில் புதிது புதிதாக வித்தியாசமாக
எழுத வேண்டும் என்று தோன்றியது. அவைகள் பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டுமே என்ற சந்தேகமும்
எழுந்தது. அவன் எதிர்பார்ப்புகள் பல நேரங்களில் நிறைவேறுவதில்லை. அதை நினைத்த போது
அவனுக்கு விரக்தியாக இருந்தது.
பிரசுரமானால்... அதுவும் ஒரு மாதிரியாக
மனச்சோர்வாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். ஏதோ ஒன்று நடந்து விட்டுப்
போகட்டும், அதை பற்றி யோசிக்க கூடாது என்று எண்ணிக் கொண்டான்.
இப்படி இருக்கும் போதுதான் அவனை குரூப்பிலிருந்து
வெளியேற்றினார்கள். வெளிநாடுகளில் அவனுக்கு வாசகர்கள் அநேகம். இனி அவர்கள் தன்னைப்
படிக்க வாய்ப்பில்லை என்று நினைத்த போது அவனுக்கு விம்மி விம்மி அழ வேண்டும் போல்
தோன்றியது.
"என் வாசகர்கள் குறைகிறார்கள், அதிகமாகிறார்கள்
என்பது ஒரு விசயம் அல்ல. அவர்கள் என்னைத் தேட வேண்டும். என் எழுத்துகளை தேடி வாசிக்க
வேண்டும். அப்படி என் எழுத்துகள் அமைய வேண்டும். அதுதான் சிறப்பு." இப்படி நினைத்த
எஸ்.கே. தோன்றினால் மட்டும் எழுதுகிறான்.
எதற்காகவும் கட்டுப்பட்டோ, ஆசைப்பட்டோ
எழுதுவதை விட்டு விட்டான். மெனக்கெட்டு எழுதுவது சுத்தமாக இல்லை. தினம் ஐந்து பக்கங்களாவது
எழுதுகிறான். அது வெளியுலகுக்கு தெரிய வருவதும், தெரிய வராமல் போவதும் வாசகர்கள் கையில்தான்
இருக்கிறது.
*****
No comments:
Post a Comment