3 Aug 2017

வேலை நெருக்கடிக்குத் தீர்வு காணுங்கள்!

வேலை நெருக்கடிக்குத் தீர்வு காணுங்கள்!
            அவரவர்களும் தங்களின் மனநிலையையும், சுயநலத்தையும் காத்துக் கொள்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்களும், செயல்களும் அதைப் பொருத்தே அமைகின்றன. அதை அவர்கள் வெளி உலகுக்குத் தகுந்த மாதிரி வண்ணம் அடித்துக் காட்டுகிறார்கள்.
            அவர்கள் தங்கள் ஆசைகளை வெளியே சொல்வதில்லை. தங்கள் ஆசைகளை ஒரு பொது நலம் போல எதார்த்தமாகச் சுட்டுவது போல சுட்டுகிறார்கள். அந்தப் பொதுநலத்திற்காகத்தான் அப்படிச் செய்வதாக நாடகம் ஆடுகிறார்கள். உள்ளே இருப்பது அவர்களின் சுயநலமும், பேராசையும்தான். அதைச் சாமர்த்தியமாகச் செய்பவன் பிழைக்கத் தெரிந்தவன் என்றும், சாமர்த்தியமாகச் செய்யத் தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பட்டம் ஏற்கிறார்கள்.
            எஸ்.கே. அப்போது கடுமையான வேலை நெருக்கடியில் இருந்தான். அந்த வேலைகளை முடித்து விட்டு, தனக்கு நெருக்கமானவர்களின் வேலைகளை முடித்துத் தருவதாகக் கேட்டுப் பார்த்தான். கேட்பதாக இல்லை. வேறு வழியில்லை என்று தன் வேலைப் பட்டியலைக் குழப்பிப் போட்டான். யார் யார் முதலில் என்கிறார்களோ அவர்களுக்குச் செய்து கொடுத்தான். அவரவர்களை அவர்களின் போக்கில் விட்டான். சூழ்நிலைகளின் அழுத்தத்தை சூழ்நிலைகளின் போக்கிலேயே விட்டான்.
            யார் யார் முதலில் வேலை முடிய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்களோ, அவர்கள் வேலை முடிந்த பிறகு கடுமையான மன நெருக்கடிக்கு ஆளானார்கள். காரணம் என்னவென்று கேட்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாதா என்ன? அங்குதான் நிற்கிறான் எஸ்.கே. நீங்களும் அந்த இடத்தில் நிற்க வேண்டும். நிற்பீர்களா?

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...