27 Aug 2017

எழுத்துலக தாரக மந்திரம்

எழுத்துலக தாரக மந்திரம்
            திரைக்கதையில் கவனம் செலுத்தலாம் என்ற எண்ணம் சில நாட்களாக எஸ்.கே.வை இம்சை செய்து கொண்டிருக்கிறது.
            அவன் கண்டபடி திரையுலகை விமர்சித்து இருப்பதால் அவன் எழுதும் திரைக்கதைகளைத் திரையுலகம் ஏற்பது சந்தேகத்திற்கு உரியது.
            திரையுலகுக்குப் பயன்படாத திரைக்கதைகளை எத்தனை நாள் அவன் எழுதிக் கொண்டு இருக்க முடியும்? ஆளில்லாத கடையில் டீ ஆற்ற முடியும் என்றால் இதுவும் முடியுந்தான் என்கிறான் எஸ்.கே.
            இது எழுதுவதற்கான ஒரு பயிற்சி மட்டுமே என்பான் எஸ்.கே. அடுத்தடுத்த முயற்சிகளைத் தொடங்க இது ஒரு மார்க்கம் என்பான் மேலும்.
            எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளைப் பிரபலப்படுத்த எதையாவது செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று அடிக்கடிக் கூறுவான். வெளி மாநிலங்களில் தமிழ்க் கூட்டம் நடத்த வேண்டும் என்பது அவனது அலாதிப் பிரியம்.
            அவர்களுக்குப் புரியுமா? என்ற கேள்வியை அவன் முன்னால் வைக்க முடியாது. தமிழ்நாட்டில் நடத்தினால் மட்டும் இங்குள்ளவர்களுக்கு என்ன புரியப் போகிறது என்பான்.
            அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்பது எஸ்.கே.வின் கொள்கை முழக்கம்.
            நாட்டில் நிகழ்பவைகளுக்கு எல்லாம் மனதில் தோன்றும் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்பது அவனது விருப்பம். அவனது எழுத்துகள் பிரசுரம் ஆவதில்லை. நாட்டில் ஏதும் அசாம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் தன் எழுத்து பிரசுரமாக வில்லை என்று விலாப் புடைக்க சிரித்துக் கொண்டே சொல்லும் எஸ்.கே. சிறிது இடைவெளி விட்டுச் சொல்லுவான், "எந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு. பிரசுரம் ஆன எழுத்துகளுக்குப் பரிகாரம் இல்லை"

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...