தொண்டன்டா நீ!
எனக்கு எந்த
அரசியல்வாதியையும்
பிடிக்கவில்லை
என்ற நண்பனிடம் கேட்டேன்
ஊழல் செய்வதால்
பிடிக்கவில்லையா?
இல்லை என்றான்.
கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றாததாலா?
இல்லை.
சொத்துக்
குவிப்பில் சிக்கியதாலா?
இல்லை.
சட்டமன்றத்திலோ,
நாடாளுமன்றத்திலோ
குரல் கொடுக்காததாலா?
இல்லை.
தலைவர் என்றால்
காலில் விழுந்து
வணங்குவதாலா?
இல்லை.
காரியம் ஆக
லட்சங்களில் தொகை கேட்பதாலா?
இல்லை.
நாலு காலேஜ்,
பத்து பள்ளிக்கூடங்கள் நடத்துவதாலா?
இல்லை.
பிறகு என்னதான்
காரணம்?
போன தேர்தலுக்கு
ஓட்டுப் போட
ஒருத்தனும்
எனக்குப் பணம் கொடுக்கவில்லை என்றான்.
*****
No comments:
Post a Comment