எதிர்மறை எண்ணங்களை எதிர் கொள்ள...(சாதாரணத்
தலைப்பு)
எதிர்மறை மனநிலைகள்தான் உங்கள் பிரச்சனைக்குக்
காரணம் என்றால் அதை தயவுசெய்து ரப்பரை வைத்து அழிக்கும் முயற்சியில் இறங்கி விடாதீர்கள்.
அழிக்க அழிக்க கல்வெட்டாகும் விசித்திரம் பிடித்தவைகள் அவைகள்.
அது நடக்காது என்றால் அத்தோடு விட்டு
விட்டால் அது அத்தோடு முடிந்து விடும். அதை மனதில் போட்டுக் குழப்ப ஆரம்பித்தால்
மனம் எதிர்மறை மனநிலைகளால் விரிந்து கொண்டிருக்கும். எது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ,
கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு அதுவே பிடிக்கத் தொடங்கி
விடும். சண்ட பிரசண்மாக இதைக் கையாண்டால் பிரச்சனைகளுக்குக் கொண்டாட்டம்தான். அம்மை
நோய்க்கு ஆங்கில வைத்தியம் பார்த்தது போலாகி விடும்.
எப்படிப் பார்த்தாலும் உற்சாகம் முக்கியம்
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்குத்தான் மனிதன் தவிக்கிறான். கொஞ்சம் விசித்திரமாக
இருக்கலாம். தயவுசெய்து கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் உற்சாகம் ஒருபோதும் குறையாது.
மதுவை அருந்துவதும், புகையைப் பிடிப்பதும்,
வஸ்துக்களை நாடுவதும், போதையைச் சுகிப்பதும் உற்சாகத்திற்காகத்தான். அப்படியாவது உற்சாகம்
கிடைக்குமா என எதிர்பார்க்கலாம்.
நான் ஏன் உற்சாகமாக இருக்க யோசிக்கிறேன்?
என்று கேள்வி கேட்டுப் பார்த்து இருக்கிறீர்களா? விடை கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கும்.
நான் உற்சாகமாக இருந்தால் எனக்கு பொறுப்பு இல்லை என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்களோ
என்ற நினைப்பீர்கள். அவர்கள் போல் கவலைப்பட்டால்தான் நான் அக்கறையாக இருக்கிறேன் என்று
நினைத்துக் கொள்வார்கள் என்று நினைப்பீர்கள்.
உங்கள் மனதை உரித்துப் போட்டு விட்டேன்
என்று பார்க்கிறீர்களா? நிர்வாண மனதில் எதுவும் இல்லை. அங்கு மனம் கூட இல்லை. உடுத்திக்
கொள்ள உடம்பு இல்லாத ஒன்று எதை உடுத்திக் கொள்ளும்? நீங்களே சொல்லுங்கள்!
*****
No comments:
Post a Comment