விதிப்பயன்
"நீங்கள்
நல்லவர் என்பதற்காக
எதுவும் வழங்கப்பட
போவதில்லை.
கெட்டவர் என்பதற்காக
தண்டிக்கப்படாமல்
போவதில்லை."
என்றான்
விதியே என்று
கடந்து கொண்டிருந்த
ஒருவனிடம்
விதிப்பயனைக்
கடந்து
கோயிலின்
வாயிலில்
பிச்சைக்காரனாகி
விட்ட
மற்றொருவன்.
அவனுக்கு தன்
பிச்சையை
ஈந்து விட்டு
அதற்கான பயனை
எதிர்பார்க்காமல்
தனக்கான தண்டனையை
எதிர்நோக்கிச்
செல்லத் துவங்கினான்
அந்த ஒருவன்!
*****
No comments:
Post a Comment