25 Aug 2017

போகியின் கதை

போகியின் கதை
ஓர் ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.
அந்த ஊரிலே ஒரு தொழில் அதிபர் இருந்தான்.
ஒரு நாள் அந்த தொழில் அதிபர் விவசாயிடம்
மூன்றடி நிலம் கேட்டான்.
விவசாயியும் தந்தான்.
மூன்றடி நிலத்தில் நின்று கொண்டு
விவசாயியின் மொத்த நிலத்தையும் அளந்தான்
அந்தத் தொழில் அதிபர்.
விவசாயி மரித்துப் போனான்.
அவன் மரித்து அவனை எரித்த
அந்த நாளைத்தான்
நாம் போகிப் பண்டிகையாக
எரித்துக் கொண்டாடுகிறோம்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...