கோபத்தின் ஆணி வேரைப் பிடுங்குங்கள்!
கோபப்படும் போது சின்ன சின்ன மனவருத்தங்களை
ஊதிப் பெரிதாக்கி விடுகிறோம். பிரச்சனையாக இல்லாததைக் கூட மாபெரும் பிரச்சனையாக சித்தரித்து
விடுகிறோம்.
கோபம் இப்படித்தான் நெருங்கிய உறவுகளையும்,
நட்புகளையும் காலி செய்து விடுகிறது. தேவையில்லாத மன உளைச்சல்களையும் உருவாக்கி விடுகிறது.
மனம் விரைவு நிலையை அடையும் போதெல்லாம்
இப்படி ஒரு நிலை ஏற்படும். மனம் விரைவாக செயல்பட முனையும். நிகழ்வுகள் மெதுவாக நிகழும்.
இடைப்பட்ட இடைவெளியில் விழும் வேக வேறுபாடு கோபத்தை உருவாக்கும்.
நெட் உலகில் வாழ்பவர்களுக்கு இது எளிதாக
நிகழும். நொடி வேகத்தில் காரியங்கள் நிகழும் நெட் உலகிற்கு அப்படியே மாறுபட்டதாக எதார்த்த
வாழ்வு மணிக் கணக்கில் நேரத்தை இழுக்கும்.
நேர இழுவையின் காத்திருப்புக்கு ஒத்து
வராத மனநிலையை உடையவர்கள் பாவப்பட்டவர்கள். உணர்ச்சிவசப் படுவார்கள். கோபப்படுவார்கள்.
அருகில் கண்ணாடி ஜாடி இல்லாது போனால் அருகில் இருப்பவர்தான் உடைபட நேரிடும்.
பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
காரியங்கள் மெதுவாக நிகழ்வதை ஆசீர்வதியுங்கள்.
உங்களுக்கான ஓய்வு நேரம் அதுதான். அதற்குப் பின் நீங்கள் ஓய்வு எடுக்க முடியாத அளவுக்குக்
காரியங்கள் அதிகமாகக் கூடும்.
வேகத்தை வியப்பதோ, மெதுவாக நடைபெறுவதை
இகழவோ எதுவுமில்லை. அவரவர் பார்வையில் உலகம் மாறுகிறது. உங்கள் பார்வையில் பூமி வேகமாகவும்
சுற்றலாம். மேதுவாகவும் சுற்றலாம். அது மனதில் நீங்கள் கருதிக் கொண்டிருக்கும் வேகத்தின்
எதிர்பார்ப்பைப் பொருத்தது.
*****
No comments:
Post a Comment