நாம் ஏன் பிரச்சனைகளைத் தீர்ப்பதில்லை?
உங்கள் இருவரின் பிரச்சனையை எடுத்துக்
கொண்டால் அது ஒரு ஈகோ பிரச்சனையாகத்தான் தெரிகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
இருந்தால் இநத அளவுக்கு வந்திருக்கப் போவதில்லை.
உங்களைப் பொருத்த வரையில் மனதளவில் விட்டுக்
கொடுக்கவும் விருப்பம் இல்லை. அதே நேரத்தில் காரியத்தைச் சாதிக்கும் ஆற்றலுமில்லை.
இந்த வித்தியாசம் உங்கள் வாழ்வில் பிரச்சனையாக வெடிக்கிறது.
நான் சொல்வது உங்கள் மனதுக்கு உகந்ததாக
இருந்தால் எடுத்துக் கொள்கிறீர்கள். ஒவ்வாமையாக இருந்தால் விலக்கி விடுகிறீர்கள்.
ஏற்கனவே உங்களுக்குப் புத்திமதிகள் சொல்லி
நான் பட்ட அவஸ்தைகள் என் மனதிலிருந்து மறையவில்லை. அவைகள் எதையும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
உங்கள் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் நீங்கள் செய்வீர்கள்.
இனி உங்களுக்கு புத்திமதிகள் கிடையாது.
ஆறுதல் மட்டுமே. அதை மட்டும் சொல்லி அத்தோடு விட்டு விடுவது என்று இருக்கிறேன்.
உங்களுக்கு வழங்கிய, உங்கள் காதுகளால்
கேட்ட அறிவுரைகள் முதலை வாயில் போனது போல்தான். அது உங்கள் நடத்தை வழி மீளும் என்பது
பகல் கனவு. எதாவது அதிசயம் நிகழ வேண்டும் அவைகள் நடப்பதற்கு. ஆனால் பாருங்கள்! எப்போதும்
எல்லாவற்றிலும் அதிசயம் நிகழ்ந்து விடுவதில்லை.
உங்கள் குழந்தைகள் உங்களைப் பாடாய்ப் படுத்தும்
போது, நீங்கள் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க நேரிடும். அப்போது என் அறிவுரைகள் உங்கள்
மனதில் வந்து நிழலாடும்.
(எஸ்.கே. எழுதிய
'தம்பதியர் சிலருக்கு வழங்கிய அறிவுரைகள்' என்ற நூலிருந்து சில பகுதிகள்)
*****
No comments:
Post a Comment