13 Jul 2017

S.K.வை ஏன் பிடிக்கும்?


S.K.வை ஏன் பிடிக்கும்?
            S.K.வை ஏன் பிடிக்கும்? அவர் எழுத்தில் பாலியல் இருக்கிறது. பாலியலை விரும்புகிறோம். பலருக்கும் தெரியாத பாலியல் ஏடாகூட விசயங்கள் S.K.வின் எழுத்தில் உண்டு.
            மேல்தட்டு வாழ்க்கைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. S.K.வுக்கு அது தெரிந்திருக்கிறது. வக்கிர மனத்தின் இயக்கத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார். கொஞ்சம் கடுமையாக அவர் திட்டுவது பிடித்திருக்கிறது. அப்படி திட்ட நினைத்து எத்தனை பேரால் திட்ட முடிகிறது?
            வாழ நினைக்கும் வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நமக்கு எங்கே முடிகிறது? நாலு சுவரைக் கட்டிக் கொண்டு அழுகுனி காரணங்களைச் சொல்லிக் கொண்டு ஏதோ போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை.
            S.K.வுக்கு என்று ரகசியம் இல்லை. நமக்கு ரகசியம் ஏராளம். அடுத்தவர்களின் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதில் ஓர் ஆர்வம். S.K.வின் எழுத்தில் வெளிப்படும் ரகசியங்கள் பிடித்திருக்கிறது.
            S.K.வை ஏன் பிடிக்கவில்லை? என்றும் எழுதலாம். அது பிற்பாடு. ஒரு மனிதரை பிடிப்பதற்கும், பிடிக்காமல் இருப்பதற்கும் காரணங்கள் இருக்கிறது. எத்தனை காலம்தான் ஒருவரைப் பிடித்துக் கொண்டிருக்கும்? அப்படி பிடிக்காமல் போகலாம். பொறாமையாலும் பிடிக்காமல் போகலாம்.
*****

No comments:

Post a Comment