14 Jul 2017

அரசியல் உள்ளடிகள் - by எஸ்.கே.


அரசியல் உள்ளடிகள் - by எஸ்.கே.
            நிறைய எழுத வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே மூச்சில் முடிகிய காரியம் இல்லை அது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய வேண்டும். இப்போது அரசியல் உள்ளடிகள் பற்றி கொஞ்சம்...
            அவனவன் செய்கின்ற பாவங்களுக்கு அவனவன் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிற போது, எவன் எதைச் செய்தால் என்ன? யார் பணத்தை யார் எடுத்துத் தின்றால் என்ன? எவன் ஒழுங்காக வேலைக்கு வந்தால் என்ன? விருப்பம் போல் நள்ளிரவு 12 மணிக்கோ, 1 மணிக்கோ வந்தால் என்ன? அல்லது வராமல் போனால் என்ன?
            திரு எக்ஸ்க்கு தான் செல்வாக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம். இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கென்ன? அதற்காக சில அரசியல் உள்வேலைகளைச் செய்கிறார். செய்தால் செய்து விட்டுப் போகட்டும். நீ ஒதுங்கிக் கொள். எல்லாம் ஊறுகாயோடு ஊறியது. பிரித்தெடுக்க முடியாது. பழைய சோறு எடுத்துச் சென்றால் நைசாக யாருக்கும் தெரியாமல் ஒரு காக்காக கடி கடித்துக் கொண்டு அல்ப சந்தோசமாக ஆனந்தப்படுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
            ஆனால் நான், நீ இருவருமே ஒரு முட்டாள்தனமாக காரியம் செய்து விடுகிறோம். அவனிடம் போய் ஒரு துண்டு பீடி கேட்டு விடுகிறோம். கொஞ்சம் கண்ணில் விளக்கெண்ணெய்யை விட்டு அலைந்தால் ஆயிரம் துண்டு பீடிகளைப் பொறுக்கலாம்.
            பற்ற வைப்பதற்கு உனக்கு ஒரு ஆள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள், சத்தியமாக என் எழுத்தால் உனக்கு எந்த பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அணையப் போவதற்கு முன் முதுகை வளைத்து துண்டு பீடியைப் பொறுக்கப் பழகு. யார் முன்னும் தலைநிமிர்ந்து துண்டு பீடி கேட்கும் அவசியம் உனக்கு நேராது.
            ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?! அந்த கூன் விழுந்த தாத்தனைப் பார்! அநாயசமாக எத்தனைத் துண்டு பீடிகள் பொறுக்கி கையில் வைத்திருக்கிறார்!
*****

No comments:

Post a Comment