26 Jul 2017

சோக வரலாற்றின் அரசியல் பின்புலம்

சோக வரலாற்றின் அரசியல் பின்புலம்
            "ஒரு கட்சியின் இரண்டு மூன்று அணிகள் இணைவதற்குள், எதிரும் புதிருமான இரண்டு கட்சிகளும் இணைந்து விடும் போலிருக்கிறது.
            என்னா பாசம்!
            என்னா நெருக்கம்!
            இப்படிப்பட்ட அரசியல் பண்பாடு தழைத்தோங்குவதாக.
            அரசியலின் இருபெரும் ஆளுமைகள் இருந்த போது நிகழாத மாற்றம் இது. ஆளுமைகள் சாதிக்க முடியாத சாதனை இது.
            ஆளுமைகள் என்பதே பகைமையை வளர்க்கத்தான் போல. அதன் காரணமாகவே மிகப்பெரிய ஆளுமையாக வளர்வதை விரும்பவில்லை இந்த எஸ்.கே."
            தான் மிகப்பெரிய ஆளுமையாய் வளர முடியாமல் போனதற்கு எஸ்.கே. எழுதிய கருத்து விளக்கமே நீங்கள் மேலே படித்தது. தன்னுடைய சொந்த வாழ்வை பொது அரசியல் வெளியில் விரிவாக்கி அதைப் பிரதிபலிக்கச் செய்யும் ஆற்றல் எஸ்.கே.வுக்கு எப்போதும் உண்டு.
            அவரது சோக வரலாற்றில் அரசியல் வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பது அறிவுஜீவிகள் செய்த பாக்கியமே.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...