10 Jul 2017

அன்பின் விலை


அன்பின் விலை
அந்தப் பெரிய வியாபார வீதியில்
நிலத்தை விற்றான் ஒருவன்
தண்ணீரை விற்றான் இன்னொருவன்
காற்றை விற்றான் மற்றொருவன்
கிட்னியை, கல்லீரலை, இதயத்தை
பகுதி பகுதியாக விற்றான் வேறொருவன்
அன்பை விற்கும் யோசனை வந்த
ஒரு மனிதன்
அதை விற்கத் தொடங்க
வாழ்நாள் முழுவதும்
வெறுப்பைச் சம்பாதித்த மனிதர்கள்
சிறைச்சாலை குற்றவாளிகள் போல்
கூடினர் அவன் முன்.
அன்பின் விலை அதிகம் என்று
வீடு திரும்பிய அவர்கள்
மானிய விலை அன்பு
விற்பனைக்கு வர வேண்டும்
என்று கோரிக்கை முழக்கம்
எழுப்பியபடியே இருந்தனர்.
*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...