24 Jul 2017

எங்கள் ஊருக்கு எத்தனைப் பேருந்து?

எங்கள் ஊருக்கு எத்தனைப் பேருந்து?
எங்கள் ஊருக்கு
1990 லிருந்து இன்று வரை
ஒரு அரசுப் பேருந்துதான்.
இடைப்பட்டக் காலத்தில்
மக்கள் பெருத்து
கடை வீதிகள் விரிந்து
வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம்
வந்து விட்டது.
இன்னும் அதே ஒரு அரசுப்பேருந்துதான்
புள்ளதாச்சி பெண்ணைப் போல்
ஊர்களைச் சுமந்து
ஊர்களைக் கடந்து செல்கிறது.
இந்த இடைப்பட்டக் காலத்தில்
தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும்
ஆறு பேருந்துகளை
இயக்கிக் கொண்டு இருக்கின்றன
எங்கள் ஊருக்கு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...