என்பவர்கள் வழிச் செல்க!
இரண்டு குழந்தை
பிறந்ததும்
கருத்தடை
செய்ய வேண்டும் என்கிறார்கள்
அன்றாடங்காய்ச்சியிடம்
போய்
காப்பீடு
எடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்
அரசு உதவிக்குச்
செல்லும்
ப்ளாட்பாரத்தில்
வசிப்பவனிடத்து
வீட்டுவரி
ரசீது கட்டாயம் கேட்கிறார்கள்
இரண்டு ஆதார்
கார்டு உள்ளவனை
அதிர்ஷ்டசாலி
என்கிறார்கள்
கடன் வாங்கி
டீ குடிப்பவனிடம்
செல்பேசியில்
அழைத்து
வங்கிக்
கணக்கில் குறைந்தபட்ச இருப்பை
பராமரிக்கச்
சொல்கிறார்கள்
டூப்ளிகேட்
விசா, பாஸ்போர்ட்டில் சென்று வந்தவனை
புத்திசாலி
என்கிறார்கள்
வாக்காளர்
அடையாள அட்டை வைத்திருப்பவனை
வாக்காளர்
பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதாக
வாக்களிக்க
மறுக்கிறார்கள்
அருகிலிருக்கும்
டாஸ்மாக்கை அகற்றப் போராட
அனுமதி மறுக்கிறார்கள்
விரிவுவாகிக்
கொண்டே செல்லும் பீர் பேக்டரிக்கும்
பட்டா போட்டுச்
செல்லும் ரியல் எஸ்டேட்டுக்கும்
நிலம் கையகப்படுத்த
தாராள அனுமதி வழங்குகிறார்கள்
தண்ணீர்
பாக்கெட் ஒரு ரூபாய் என்கிறார்கள்
சிறுநீர்
கழிக்க இரண்டு ரூபாய் என்கிறார்கள்
வீட்டில்
இருப்பவர்கள் சாமர்த்தியம் முக்கியம் என்கிறார்கள்
டிராக்டர்
லோன் கிடைக்காவிட்டால்
கார் லோனே
போடேன் என்று சமத்தாக!
*****
No comments:
Post a Comment