25 Jul 2017

தங்கராசு தாத்தா

தங்கராசு தாத்தா
பத்து ரூபாய் பணம் இருந்தால்
அதில் ஒரு டீ குடித்து விட்டு
வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்வார்
தங்கராசு தாத்தா.
நெட் பேக் போட்டு
இ வாலட்டில்
பணத்தை மாத்திக்கச் சொன்னால்
என்ன பண்ணுவார்
பத்து ரூபாய் பணம் கிடைக்காத நாளில்
பல்லைக் கடித்துக் கொண்டு
ரோஷமாக டீ குடிக்காமல் இருக்கும்
தங்கராசு தாத்தா?

*****

No comments:

Post a Comment