25 Jul 2017

கொடுக்கல் வாங்கல்

வெற்றி ரகசியம்
            "ஸ்கூல்லயும் படிக்கணும், கோச்சிங் சென்டர்லயும் படிக்கணும்!" நீட் தேர்வில் தேர்வு பெற்ற ஆதித்யா சக்சஸ் சீக்ரெட் சொன்னான்.
*****
அது சரி!
            "பிரைவேட் டியூசன், கோச்சிங் கிளாஸ் அது இதுன்னு அலைஞ்சு பாதி உசுரு போயிடும்ங்க. பேசாம பையனைக் கவர்மென்ட் ஸ்கூல்லயே சேர்த்து விட்டுடுங்க. நிம்மதியாவாவது படிப்பான்!" என்று மனைவி பத்மா சொன்னது சரியாகவே பட்டது ரஞ்சனுக்கு.
*****
கொடுக்கல் வாங்கல்
            "நீங்க பெட்டி வாங்குனது ஜனங்களுக்குத் தெரிஞ்சுப் போச்சு!" என்று பி.ஏ. சொன்னதும், "வுடுய்யா! ஒரு ஓட்டுக்கு இவ்வளவோன்னு அவங்களுக்குக் கொடுக்கத்தான் வாங்கியிருக்கேன்னு தெரியும்யா!" என்றார் பச்சமுத்து.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...