பாலைவனத் திட்டம்
பெட்ரோல் கிடைக்கும் நாடுகளை எடுத்துக்
கொள்ளுங்கள். எல்லாம் பாலைவன நாடுகளாக இருக்கின்றன.
ஓர் இடம் பாலைவனம் ஆகி விட்டால் பெட்ரோல்
தாராளமாகக் கிடைக்கும் போல. காவிரிப் பகுதியையும் அப்படி பாலைவனமாக்கி விட்டால் தாராளமாக
பெட்ரோலியத்தை உறிஞ்சி உறிஞ்சி எடுக்கலாம்.
ஒவ்வோர் ஆண்டும் சென்ற ஆண்டை விட தண்ணீர்
குறைவாக வரும் காவிரி ஆற்றை இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீர் வராத ஆறாகப் பார்க்க நேரிடலாம்.
காவிரிக் கரையோரத்தின் அருகே குடிதண்ணீர்
கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருகிறது. பத்து அடி, பதினைந்து அடி ஆழத்தில் கிடைத்து
வந்த குடிதண்ணீர் இப்போது அதளபாதாளத்துக்குப் போய், நீர்மூழ்கி மோட்டார்கள் வைத்து
உறிஞ்ச வேண்டிய நிலை.
பொட்டல் எங்கும் கருவ மரங்கள், எருக்கஞ்
செடிகள். என் பால்யத்தில் பார்த்த பசுமை பொங்கிய நிலங்களா இவைகள்!
காவிரி டெல்டா பாலைவனமாகி விட்டால் யார்
வசிக்கப் போகிறார்கள்? யாரும் வசிக்காதப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு யார்
போராட்டம் பண்ணப் போகிறார்கள்?
நடந்தாய் வாழி காவிரி, இனி பெட்ரோலாய்
வழிந்தாய் வாழி காவிரி என்று ஆகி விடும்.
இலங்கைத் தமிழனுக்கு மட்டுமா புலம் பெயர்
வாழ்வு? காவிரி டெல்டாவில் வசிக்கும் தமிழனுக்கும் அதே வாழ்வுதான். தமிழன் என்றால்
இதே, அதே வாழ்வுதான் இனி எங்கும் போலும்.
*****
No comments:
Post a Comment