4 Jul 2017

சிறுகதை எழுதுவது எப்படி? - எஸ்.கே.யின் அனுபவம்


சிறுகதை எழுதுவது எப்படி? - எஸ்.கே.யின் அனுபவம்
            சிறுகதைகள் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
            ஆர்வம்... ம்ஹூம் எழுந்த பாடில்லை. நாட்கள் மெத்தனமாக கழிகின்றன. மனதில் ஆர்வம் எழ வேண்டும் என்று நினைத்தால் எந்த பிறவியிலும் எழாது. ஏனென்றால் மனம் ஒரு தோற்றம்தான். அது நிஜம் கிடையாது. இன்னும் சரியாக மாயத்தோற்றம் என்று சொன்னால் கூட சரிதான்.
            யோசித்துக் கொண்டு இராமல் ஆரம்பித்து விட வேண்டும். அதுதான் சூட்சுமமம்.
            சிறுகதைகளை மிகவும் வித்தியாசமாக, பிரமாண்டமாக எழுத வேண்டும் என்றெல்லாம் எந்த கட்டாயத்தையும் செய்து கொள்ள வேண்டாம். அது சிறுகதை எழுதும் முயற்சியைத் தடை செய்து விடும். அதுவாக வருவது வரட்டும். சுமாராக இருந்தால் கூட போதுமானதுதான்.
            பொதுவாக சிறுகதை எழுதுவது குறித்து வெளியே தண்டோரா கொட்டி விடக் கூடாது. எழுதி முடிப்பது வரை ரகசியம் காப்பது நல்லது. அதனால் சிறுகதை எழுதினாலும், எழுதாமல் போனாலும் அது குறித்த அநாவசிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
            சிறுகதைகளை சைக்காலஜிகலாகவும் எழுதாலாம். சின்ன சின்ன கதைகளாகச் சொல்லி அதன் மூலம் ஒரு நீதியையும் பேசலாம்.
            சிறுகதை எழுதும் காலகட்டத்திற்கும், அது பிரசுரமாகவும் காலகட்டத்திற்கும் இடையே எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு விடக் கூடாது. அதனால் கோபப்படும் குணம் வந்து விடலாம்.
            எல்லாம் நன்மையில்தான் முடிந்தாக வேண்டும் என்பதால் எதிர்மறை எண்ணம் தேவையேயில்லை. ஆகவே பாசிட்டிவாக நினைப்பதுதான் சரியானது. உழைப்பு ஒன்றுதான் அத்தகைய எண்ணங்களை மாற்றக் கூடியது.
            இந்த ஐடியாக்களைப் பிடித்து ஒரு சிறுகதை எழுதி விட்டால்... எனக்கு ஒரு வரி எழுதிப் போடுங்கள். நானும் முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

மட்டையான மட்டைப் பந்து!

மட்டையான மட்டைப் பந்து! நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரிந்த அளவுக்கு ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது அல்லது ஐந்து நாள் போட...