5 Jul 2017

வீடற்றவனின் வார்த்தைகள்


வீடற்றவனின் வார்த்தைகள்
வீடிருப்பவனுக்கு
வெள்ளம் என்றும்
வேக்காலம் என்றும்
கடுங்குளிர் என்றும் சொல்ல
சொல்லிருக்கிறது
வீடற்றவனுக்கு
வீடு என்ற ஒற்றைச் சொல்லே
எல்லாமாக இருக்கிறது
வியர்வையோ
ஊதக் காத்தோ
மழையோ
வீடற்ற தன்மையிலேயே
எல்லாவற்றையும்
ஒன்றென பாவித்து கடந்து விடும் அவன்
ஒதுங்கிக் கொள்ள
ஒரு வீட்டின் வெளி ஓரம் போதும் என்று
ஓடிக் கொண்டே இருக்கிறான்
*****
(நன்றி - ஆனந்த விகடன் - 05.07.2017 இதழ் - பக்கம் 62)

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...