முடிந்ததும், இயன்றதும், சாத்தியமானதும்
விடுமுறை
தினமாக
நான் வீடு
திரும்பும் நாள்களில்
பிள்ளைகள்
பள்ளிக்கூடம் செல்கிறார்கள்
மனைவி பணிக்குச்
செல்கிறாள்
பக்கத்து
வீட்டுக்காரர் செய்திச் சேனலில்
மூழ்கிக்
கிடக்கிறார்
எதிர் வீட்டுக்காரர்
வாட்ஸ் அப்பே
கதியெனக்
கிடக்கிறார்
ஒன்றிரண்டு
நண்பர்களும்
டாஸ்மாக்கில்
வீழ்ந்து கிடக்கிறார்கள்
பால்ய நண்பர்கள்
பலரும்
ஓசூரிலும், திருப்பூரிலும்
இயந்திர
ஓசைகளின் நடுவே
பால்யத்தின்
சத்தங்களை
அசைபோட்டுக்
கொண்டிருக்கக் கூடும்
என்னால்
முடிந்ததும் மகிழ்ந்ததெல்லாம்
வீட்டைச்
சிறிது சுத்தப்படுத்தியதும்
ப்ளம்பிங்
வேலை கொஞ்சம் பார்த்ததும்
கடன் தவணைத்
தொகைளை கட்டி வந்ததும்
குடிநீர்
வரியும், மின்சாரக் கட்டணமும் சென்று
செலுத்தி
வந்ததும்
ஒரு நாள்
இரவில் மனைவி புணர்ச்சிக்கு
கொஞ்சம்
நேரம் ஒதுக்கியதும்
பிள்ளைகள்
ஒரு நாள் மாலை
ஆசையோடு
கடைத்தெருவுக்குக்
கூட்டிச்
செல்லக் கேட்டதும்தான்
*****
No comments:
Post a Comment