1 Jul 2017

எஸ்.கே.யின் ரகசியக் குறிப்புகளில் சில


எஸ்.கே.யின் ரகசியக் குறிப்புகளில் சில
            ஒரு தமிழ் எழுத்தாளனாக இருப்பது சாமான்யபட்ட வேலையில்லை. தீவிரமாக எழுதினால் வெகுசன வாசகர்கள் தீண்ட மாட்டார்கள். வெகுசன ரசனையில் எழுதினால் தீவிர வாசகர்கள் சீந்த மாட்டர்கள். இரண்டிற்கும் இடைபட்ட நிலையில் எழுதினால் இருவருமே கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள்.
            இவர்களைச் சமாளிப்பதற்குதான் நான் வெகுசனத் தளத்தில் ஒரு புனைபெயரையும், தீவிரத் தளத்தில் வேறோரு புனைப்பெயரையும் வைத்துக் கொண்டு எழுத வேண்டியிருக்கிறது.
            அப்படியும் பார்த்தீர்கள் என்றால், வெகுசன எழுத்தைப் படித்து விட்டு தீவிரமாக எழுத வேண்டும் என்பார்கள். தீவிர எழுத்தைப் படித்து விட்டு வெகுசன ரசனையில் எழுத வேண்டும் என்பார்கள். இதற்குப் பதில் சொல்லும் திராணி இல்லாததால் நான் மெளனமாகி விடுவதுண்டு. ஒரு எழுத்தாளன் இப்படி மெளனமாகக் கூடாதுதான். என்ன செய்வது? பதில் சொன்னால் இரண்டு புனைப்பெயர்களும் வெளிபட்டு குட்டு உடைந்து விட்டால்... வாசகர்கள் மனம் உடைந்து போய் விடுவார்கள். எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நான் இன்னொரு புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டு இருப்பேன். வாசகர்கள் பாவந்தானே!
                                    (இன்னும் ரகசியக் குறிப்புகள் வெளிவரும்...)
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...