பணி அனுவங்கள் குறித்து எஸ்.கே. பேசுகிறேன்!
நான் பாட்டுக்குப் போனேனா, பணியாற்றினேனா,
வந்தேனா என இருக்க வேண்டும். அப்படித்தான் நான் இருந்தேன்.
இடையில் என்ன நேர்ந்ததோ? என் எண்ணங்களைச்
செயல்படுத்த வாய்ப்பு கிடைத்தது என்று எகிடுதகிடாக என்னென்னமோ செய்து விட்டேன். இனி
அதற்கான வாய்ப்பு கிடைக்காது என்றே நினைக்கிறேன்.
வாய்ப்பு கிடைக்காததும் நல்லதே. கூடுதல்
உழைப்பை நல்க வேண்டியதில்லை. வேலை என்னவோ அதை மட்டும் செய்து வரலாம். தேவையான ஓய்வு
கிடைப்பதற்கான கால கட்டம் இது.
அதை ஏன் நீ அநாவசியமாகச் செய்ய வேண்டும்
என்று சமுதாயமே நினைக்கும் போது, நீ ஏன் கஷ்டப்பட்டு செய்து கெட்டப் பெயர் எடுத்துக்
கொள்கிறாய்?
உன் கேபினில் எந்த அளவுக்குத் தூங்க முடியுமோ,
அதோடு நிறுத்திக் கொள். அதுதான் கெளரவம். உன் தூக்கத்தை அடுத்தவர்கள் கேபினில் தூங்குவதோ,
அடுத்தவர்கள் தூக்கத்தையும் சேர்த்து உன் கேபினில் தூங்குவதோ அநாகரிகம்.
தினம் கொஞ்சம் எழுது. அது மனதை லேசாக்கும்.
இல்லையேல் உழைக்காமலே சாப்பிடுகிறேனே என்று குற்ற உணர்ச்சி கொன்று விடும்.
பொது புத்தியில் பலருக்கும் ஏற்படும்
குழப்பங்களைத் தீர்க்கவே வெளிப்படையாக திறந்த மனதோடு இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கும் இப்படி நேர்ந்திருந்தால் அதை தாழ்வுணர்ச்சியோடு பார்க்க வேண்டியதில்லை.
நமக்கென ஒரு தனி கம்பெனி ஆரம்பித்தால்
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும். எத்தனை முதலாளிகளுக்கு அப்படி தொழிலாளிக்கு
ஒரு கம்பெனி ஆரம்பித்துத் தர வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணம் இருக்கும் சொல்லுங்கள்?
*****
No comments:
Post a Comment