8 Jul 2017

மிஸ்டர் சீனா! மிரட்டலே நல்லது!


மிஸ்டர் சீனா! மிரட்டலே நல்லது!
            "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் ஏற்பட்டால் யாருக்கு இழப்பு அதிகமாக இருக்கும்?" என்ற கேள்வி சமீப காலமாக சமத்து சம்புலிங்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
            ஒரு வழியாக சீனாவில் தயாரான யோகா மேட் மேல் அமர்ந்து தியானம் செய்து கண்டுபிடித்த சமத்து சம்புலிங்கத்தின் முடிவு என்னவென்றால்,
            "சீனாவுக்குத்தான் இழப்பு அதிகம். இந்தியாவுடன் போர் என்றால் அது, தான் தயாரிக்கும் பாதிக்கும் மேலான குப்பைப் பொருட்களை எந்த நாட்டில் கொண்டு போய் கொட்டும்? அதனால் இந்தியாவை மிரட்டிக் கொண்டு இருப்பது மட்டுந்தான் சீனாவுக்கு நல்லது!"
*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...