காலத்தின் முரண்
அரசியலுக்கு வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும்
ரஜினி சொல்ல வேண்டியதைக் கமல் சொல்கிறார்.
அரசியலுக்கு வராமல் படங்கள் நடிப்பதில்
மட்டுமே கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படும் கமல் செய்ய வேண்டியதை ரஜினி செய்கிறார்
இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டு.
கேள்விகள் கேட்பதும், கருத்துகள் சொல்வதும்
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகள். அதைத்தான் கமல் செய்யச் சொல்கிறார். கமல்
சொல்வதால் அதற்கு ஒரு பிரபல்யம்.
அதற்கே அரசியல் தரப்பு ஆடிப் போகிறது.
அரசியல் தரப்பு மக்களை எப்படிப்பட்ட மனநிலையில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது என்பதற்கு
இது ஓர் அடையாளக் குறியீடு.
இத்தனை நாள் கமல் என்ன செய்தார்? என்று
கேட்கிறார்கள். நோயுற்றவன் நோய் முற்றிய கடைசி நிலையில் கூட வைத்தியம் பார்க்கக்
கூடாதா என்ன?
வரிகளுக்குப் பயந்து கமல் கருத்துகளை வெளியிடுகிறார்
என்கிறார்கள். ஒரு வாதத்திற்கு இதை ஒத்துக் கொண்டாலும், பயப்படும் அளவுக்கு வரிகள்
இருப்பது ஏற்புடையதா? என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அறிவுடைநம்பிக்கு பிசிராந்தையார் முன்
வைத்த கேள்விதான் நினைவுக்கு வருகிறது. நெல்லறுத்து, கவளமாக்கிக் கொடுத்தால் பல நாள்களுக்கு
வரும் ஒரு மா நிலத்தின் நெல்லை, யானையையே மேயும்படி விட்டு விட்டால் சில மணி நேரங்களுக்குக்
கூட வாராது.
கமலின் வினைகளை மெளனத்திற்குள் புதைத்து
விடாமல், எதிர்வினை ஆற்றும் வகையில் அரசியல் தரப்புக்கு நன்றி சொல்ல வேண்டிய ஜனநாயகத்
தன்மை உள்ள அனைவர்க்கும் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment