15 Jul 2017

டூ


போராட்டம்
            குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் அமர்ந்திருந்த சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்தது தாகமுள்ள காகம்.
*****
திருப்தி
            "நாமளே சாமானைப் பார்த்து வாங்குனாத்தான் ஒரு திருப்தி!" என்று வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்பிய மளிகைக்கடை அண்ணாச்சியின் மனைவி.
*****
டூ
            "அப்பாவோட டூ! இனிமே அப்பாவோட போஸ்ட்டுக்கு லைக் போடக் கூடாது!" பிடிவாதமாய் இருப்பதென முடிவெடுத்தாள் யாழினி.
*****

No comments:

Post a Comment