15 Jul 2017

எஸ்.கே.யிசம் என்பது...


எஸ்.கே.யிசம் என்பது...
            உலகில் எவ்வளவோ இசங்கள் தோன்றி விட்டன. நேற்று வைத்த ரசம் புளித்து விட்டது என்பதற்காக இன்று புது ரசம் வைக்காமல் இருக்க முடியுமா? அப்படி கருதித்தான் இந்த எஸ்.கே.யிசத்தையும் இந்த உலகில் இருக்க நான் அனுமதிக்கிறேன்.
            யாராவது போன் செய்து (ராங் நம்பர் உட்பட) உணர்ச்சிவசப்பட்டு பேசினால் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? ஆம், என்றால் கட்டாயம் நீங்கள் எஸ்.கே.யிசத்தில் இருக்கிறீர்கள். ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட ஒரு பலவீனம் இருக்கிறது. எஸ்.கே.யிடம் இருக்கும் ஒரு பலவீனம் உங்களுக்கும் இருக்கிறது என்றால் நீங்களும் எஸ்.கே.யிசத்தில்தானே இருக்கிறீர்கள்!
            உணர்ச்சிவசப்பட்டு உன் நிலை இழக்கிறாயே? அதனால் பிரயோஜனம் உண்டா? என்று நீங்கள் மனதிடம் கேட்க வேண்டும். அடப் போடா மடப் பயலே என்று அது சொல்ல வேண்டும். அப்போது நீங்கள் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?
            இந்த உலகில் உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்ய முடியாது. ஆனால், விளையாட்டாக, வேடிக்கையாக நிறைய காரியங்களைச் செய்யலாம். அப்படித்தான் காரியங்களைச் செய்ய வேண்டும். அதுதான் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். உதாரணத்திற்கு கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங்கையே எடுத்துக் கொள்ளுங்கள். 
            இவைகள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்தனத்துக்கு நாம் கொடுக்கும் விலைகள். அல்லது நாம் கொடுக்கும் அபராதம். நீங்கள் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங்கையும் ரசிப்பீர்கள். ஹீரோ பேக்ரெளண்டை விட, வில்லன் பேக்ரெளண்டில் அடித்த ஆட அதிக பெளண்டரிகளும், சிக்சர்களும் இருக்கின்றன.
            இப்போது புரிகிறதா எஸ்.கே.யிசம்? எஸ்.கே.யிசத்தை கடினம் என நினைத்துப் புரிந்து கொள்ள முயன்றால் தோற்றுப் போவீர்கள். காரணம் எஸ்.கே.யிசம் புரிந்து கொள்ள அவ்வளவு எளிமையானது. ரொம்ப எளிமையான விசயம் புரிந்து கொள்ளவும் கடினமாக இருக்கும் என்று கூறப்படுவதும் உண்டு. பார்த்துக் கொள்ளுங்கள்!
*****

No comments:

Post a Comment