12 Jul 2017

தீர்மானம்


கூல்
            எப்போதும் குளுகுளுன்னு இருக்கணும் என்று ஏகப்பட்ட ஏ.சி.க்கள் பொருத்தப்பட்ட எட்டு மாடிக் கட்டிடம் தீ விபத்தில் எரிந்து கொண்டிருந்தது.
*****
யம்
            "ரொம்ப பெரிய கடைக்குலாம் போறதில்ல. பயர் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிடுவோமோன்னு பயமா இருக்கு!" என்றான் நகரின் சிறிய ஜவுளிக் கடையில் டீ சர்ட்டும், டிரக் சூட்டும் எடுத்துக் கொண்டிருந்த ஆகாஷ்.
*****
தீர்மானம்
            "பிசினஸ் நிற்காம ஓடிகிட்டே இருக்கணும்!" என்று முடிவெடுத்த நாகராஜன் ஒரு மணல் லாரியும், ஒரு தண்ணீர் லாரியும் வாங்கி விடுவதென தீர்மானித்தார்.
*****

No comments:

Post a Comment