12 Jul 2017

பொம்மை சாட்சி


பொம்மை சாட்சி
பறவைகளை விரட்டும்
சோளக்காட்டு பொம்மையைக்
காதலின் சாட்சியாக்கி விட்டு
பிரிந்துப் போனான்
வயிற்றைச் சுமையாக்கி விட்டுச்
சென்ற காதலன்.
அறுவடைகள் முடிந்த பின்
பறவைகள் விரட்டுவதை
நிறத்திக் கொண்ட
சோளக்காட்டு பொம்மை
சாட்சி சொல்வதையும்
நிறுத்திக் கொள்ளுமோ என்று
கலங்குவேன் நான்!
*****

No comments:

Post a Comment