1 Jul 2017

பொறுக்குதலின் சுகம்


பொறுக்குதலின் சுகம்
குளத்தில் மூழ்கி
இறந்து போன மணியை
நினைத்த போது
குளத்தைப் பிடிக்காமல் போனது!
பேருந்து நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸில் மூழ்கி
இறந்து போன குளத்தை
நினைத்த போது
பேருந்து நிலையங்கள் மற்றும் காம்ப்ளக்ஸ்களைப்
பிடிக்காமல் போனது!
பொருளாதார மண்டலங்களில் மூழ்கி
பேருந்து நிலையங்கள் மற்றும் காம்ப்ளக்ஸ்கள் இறந்த போது
பொருளாதார மண்டலங்களைப்
பிடிக்காமல் போனது!
மீத்தேன் எரிவாயு திட்டத்தில் மூழ்கி
பொருளாதார மண்டலங்கள் இறந்த போது
மீத்தேன் எரிவாயு திட்டம்
பிடிக்காமல் போனது!
வல்லரசுகளின் கழிவுக் குப்பையில் மூழ்கி
மீத்தேன் எரிவாயுத் திட்டம் இறந்த போது
வல்லரசுகளின் கழிவுக் குப்பை
பிடிக்காமல் போனது!
அது சரி,
பிடித்துதான் பொறுக்கிக் கொண்டிருக்கிறோமோ
இந்த கழிவுக் குப்பைகளை?
ஒரு சாண் வயிற்றுக்காக
பொறுக்கும் போது
அப்படித்தான் தோன்றுவதாக எழுதுபவர்களும்
ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே
எழுதுகிறார்கள் பிடித்தது போல!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...