25 Jul 2017

38 பக்கங்களும் 10 சாரிடான் மாத்திரைகளும்

38 பக்கங்களும் 10 சாரிடான் மாத்திரைகளும்
            தமிழ் எழுத்தாளனாகிய எஸ்.கே.வுக்கு 38 பக்கத்தில் ஒரு கடிதம் வந்தது மகிழ்ச்சிகரமானது. அந்தக் கடிதத்தைப் படித்து முடிக்க எஸ்.கே.வுக்கு 10 சாரிடான் மாத்திரைகள் தேவைப்பட்டன என்பது துக்ககரமானது.
            தான் சொல்ல வந்த விசயங்களை ஆழமாக வலியுறுத்துவதாக நினைத்துக் கொண்டு அந்தக் கடிதம் ஒரே விசயத்தைத் திரும்ப திரும்பச் சொல்லி பஞ்சர் ஒட்டிய இடத்தில் மீண்டும் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தது.
            இது போன்ற கடிதங்கள் எழுதியவனுக்கும் தண்டனை. படிக்கின்ற எஸ்.கே.வுக்கும் தண்டனை.
            கடிதத்தைப் படித்து முடித்தவுடன் எஸ்.கே. முணுமுணுத்துக் கொண்டான், "இப்படி ஒரு கடிதத்தை எழுதுபவன் எப்படிப்பட்ட ஒரு மனநோயாளியாக இருக்க வேண்டும்!"
            இதே போல ஒரு கடிதத்தை எஸ்.கே.யின் நண்பன் எம்.கே. ஒரு போதும் எழுதியதில்லை. இத்தனைக்கும் எம்.கே.வுக்கு அவ்வளவு பிரச்சனைகள்.
            ஏன் எனக்குக் கடிதம் எழுதினால் என்ன என்று எஸ்.கே. சில நேரங்களில் எம்.கே.வைக் கேட்டிருக்கிறான். அதற்கெல்லாம் நேரமில்லை என்பான் எம்.கே.
            அந்தப் பிரச்சனைகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசக் கூடாதா என்று கேட்டு இருக்கிறான் எஸ்.கே. அதைப் பத்தி பேச எங்க நேரம் இருக்கு மக்கா? என்பான் எம்.கே.
            படித்தக் கடிதம் என்று தெரியாமல் பல நேரங்களில் எஸ்.கே. அந்த 38 பக்க கடிதத்தைத் தன்னையும் அறியாமல் படித்து விடுகிறான். அப்படிப்பட்ட நேரங்களில் அவனது பாரின் நண்பர்கள் கொடுத்த தலைவலித் தைல பாட்டில்தான் துணை இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...