தொழில்நுட்பவாதிகள்
தொழில்
நுட்பம் (டெக்னாலஜி) இல்லாவிட்டால் நாம் பின்தங்கிப் போய் விட்டதாக ஒரு மனத்தோற்றம்
அந்தந்தக் காலகட்டத்தில், அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழ்கின்ற எல்லார்க்கும் ஏற்படுவது
உண்டு.
பத்து,
பனிரெண்டாண்டுகளுக்கு முன் நான் ஓர் ஆசிரியரைச் சந்தித்த போது (அது அநேகமாக 2005 வாக்கில்
என்று நினைக்கிறேன்), "கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இல்லாதவன் லிட்ரசியா இருந்தாலும்
இல்லிட்டரசிதான்!" என்றார். அதாவது கணினி அறிவில்லாதவன் கற்றவன் ஆயினும் கல்லாதவனே.
அதற்காகவே
கணிப்பொறி பயிற்சி வகுப்பில் (கம்ப்யூட்டர் கோர்ஸில்) சேர்ந்து இருபதாயிரம், முப்பதாயிரம்
செலவழித்து கணிப்பொறி அறிவைப் (கம்ப்யூட்டர் நாலேட்ஜை) பெற்றது தனிக்கதை.
இப்போது
தொடுதிரை கைபேசிகள் (டச் மொபைல்கள்) வந்து கணிப்பொறியின் (கம்யூட்டரின்) இருப்பையே
கேலிக் கூத்தாக்கி விட்டன.
நல்ல
வேளையாக இந்த தொடுதிரை கைபேசிகள் (டச் மொபைல்கள்) இயக்குவதற்கு என பயிற்சி வகுப்புகள்
தேவைப்படாத அளவுக்கு பயனாளருக்கு அவ்வளவு எளிமையாக (யூசர் பிரண்ட்லி) அமைந்து விட்டன.
அதை இயக்கக் கற்றுக் கொடுக்கிறேன் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்று காசு பிடுங்கும்
கூட்டத்திலிருந்து அதனால் தப்பித்தாகி விட்டது.
எனக்குத்
தெரிந்த பெரியவர் ஒருவர் (வயது சுமார் 90 இருக்கும்) இன்னும் சாதாரண கைபேசி கூட இல்லாமல்தான்
இருக்கிறார். வெளியில் செல்வதையும், திரும்ப வருவதையும் அவ்வளது துல்லியமாக முன்கூட்டியே
சொல்லி விடுகிறார்.
அத்தோடு
அவருக்கு பாவேந்தர் பாடல்கள், குறட்பாக்கள், சிலேடை வெண்பாக்கள், பெருஞ்சித்திரனார்
பாடல்கள் என்று பல பாலபாடம். அப்படி சொல்கிறார் அத்தனையையும் ஞாபக பிசகில்லாமல் அந்த
90 வயதிலும்.
தொடுதிரை
கைபேசி வைத்திருப்பவர்களிடம் ஒரு செய்தி குறித்து கேளுங்கள், "ஒரு நிமிஷம் இருங்கள்"
என்று இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதில் விடை தேடுறார், அந்தச் செய்தி ஆப்பிளின்
ஸ்பெல்லிங் என்னவாக இருக்கும் என்று கேட்கப்படும் சாதாரண விசாரிப்பாக இருந்தாலும் கூட.
"அதான்
தேடு பொறியில் (சர்ச்சில்) Apple என்று சரியாக அடிக்கிறாயே!" என்று கேட்டுப்
பாருங்கள், "கன்பர்ம் பண்ணிக்கிறேன் (உறுதி செய்து கொள்கிறேன்)" என்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment