22 Jun 2017

குற்றங்கள் கொட்டும் பணம்


நோ எலிமினேஷன்
            ரேஷன் கார்டில் நீக்கப்படாமல் இருந்தது முதியோர் இல்லத்தில் இருந்த தாத்தாவின் பெயர்.
*****
குற்றங்கள் கொட்டும் பணம்
            அதிகம் குற்றங்கள் நடக்கும் பத்து நகரங்களை டிக் அடித்து முதலில் அங்கு கண்காணிப்பு காமிராக்கள் விற்கும் பிசினஸ் மாடலைத் துவக்கிய ரஞ்சித்துக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.
*****
ஆரம்பம்
            "எனக்கு மட்டும் டிவோர்ஸ் ஆகலைன்னா, கணவன் மனைவியை ஒருத்தருக்குத் தெரியாமல் ஒருத்தர் வேவு பார்க்கும் இந்த டிடெக்டிவ் ஏஜென்சியை ஆரம்பிச்சிருக்க மாட்டேன்!" என்றான் ரங்கசாமி.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...