10 Jun 2017

தொழில் வாழ்க்கை


கருத்து
            "நிலத்தடி நீர்மட்டம் ரொம்பதான் குறைஞ்சுப் போச்சு!" என்று பேசிக் கொண்டிருந்தனர் குளத்தைத் தூர்த்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் மேல் நின்ற இருவர்.
*****
ஏற்பாடு
            குடிநீர் கேட்டு நடைபெற்ற போராட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார் மணல் குவாரி கான்ட்ராக்டர் சாமியப்பன்.
*****
தொழில் வாழ்க்கை
            "ஒதுங்குறத்துக்குக் கூட நிழல் இல்லையே!" என்று தவித்தனர் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்.
*****

No comments:

Post a Comment

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்!

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்! இந்த மனிதரை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை. யார் அந்த மனிதர் என்கிறீர்களா? நீங்களும் உள்ளுக்...