10 Jun 2017

பாடலின் நினைவு


பாடலின் நினைவு
பேருந்தில் கேட்ட
இளையராஜா பாடல் போல்
அடிக்கடி நினைவுக்கு வந்தாள்
அந்தப் பாடலோடு
பேருந்தில் ஆறு நிறுத்தங்கள் வரை
அருகில் இருந்து பயணித்தவள்.
*****

கீற்று
ஒரு நம்பிக்கையின் கீற்று தெரியும் போது
தேனீயாக இருங்கள்
ஒரு அவநம்பிக்கையின் கீற்று தெரியும் போது
ஞானியாக இருங்கள்
எந்தக் கீற்றும் தெரியாத போது
அதைத் தேடாதிருங்கள்.
*****

ஆசை
அக்காவுக்கு இந்த வருடம்
நகை செய்து போட வேண்டும்
அடுத்த வருடம்
அடகு வைத்த அந்த நகையை
மீட்டுக் கொடுக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...